இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வடிவமைப்புகள்(Configurations) மற்றும் செயற்பாடுகள்(settings) Ubuntu இயக்கதளத்தில்(Operating system) Node.js வழங்கியுடன்(Server) சோதிக்கப்பட்டவை.
Nginx மறுதலை பதிலியாக(reverse proxy) பயன்படுத்தப்படுகிறது மற்றும் PM2 உற்பத்தி செயல்முறை நிர்வாகியாக(production process manager) பயன்படுத்தப்படுகிறது.
முன்நிபந்தனைகள்
சரியான பதிப்பில் (version) Node.js, Nginx & PM2 ஐ நிறுவவும் (Install).
இரண்டு NuxtJs செயலியை (apps) (example1 & example2) நிறுவவும்.
மற்றும் இரண்டு செயற்களங்களுடன் (Domain) (example1.com
& example2.com
) ஒரு பொது IPயும் (xxx.xx.xxx.xx) (IP - Internet Protocol -
இணைய நெறிமுறை) தேவைப்படுகின்றன.
இரண்டு சேவையக தொகுதி கோப்புகளை (files) உருவாக்கவும்
# எந்த உறையிலிருந்தும்(folder),
Nginx சேவையக தொகுதி கோப்புகளின் இருப்பிடத்திற்குச் செல்லவும்
$ cd /etc/nginx/sites-available/
# சேவையக தொகுப்பு கோப்புகளை
உருவாக்கி default கோப்பை நீக்கவும்
$ ls > example1.com
$ ls > example2.com
$ rm default
சேவையக தொகுப்பு கோப்புகளைத் திருத்துதல்
Nginx சேவையக தொகுதி அமைப்புகளில் சமீபத்திய மாற்றங்களுக்கு https://nuxtjs.org/faq/nginx-proxy/ ஐப் படிக்கவும்.
http://127.0.0.1:3000
வலை வாசலில் (port) example1.com
இயங்கும் & http://127.0.0.1:4000
வலை வாசலில் (port) example2.com
இயங்கும்.
# nano editorஇல் கோப்பைத் திறக்கவும்
$sudo nano example1.com
# கோப்புக்குள் கீழே உள்ள வடிவமைப்புகளை உள்ளிடவும்
map $sent_http_content_type $expires {
"text/html" epoch;
"text/html; charset=utf-8" epoch;
default off;
}
server {
listen 80;# the port nginx is listening on
server_name example1.com www.example1.com;
# setup your domain here
gzip on;
gzip_types text/plain application/xml
text/css application/javascript;
gzip_min_length 1000;
location / {
expires $expires;
proxy_redirect off;
proxy_set_header Host $host;
proxy_set_header X-Real-IP $remote_addr;
proxy_set_header X-Forwarded-For
$proxy_add_x_forwarded_for;
proxy_set_header X-Forwarded-Proto $scheme;
proxy_read_timeout 1m;
proxy_connect_timeout 1m;
proxy_pass http://127.0.0.1:3000;
#set the address of the Node.js instance here
}
}
# கோப்பை சேமித்து மூடவும்
# இதே போன்று example2.com கோப்பை திறந்து
தேவையான வடிவமைப்புகளை சேர்த்து மூடவும்.
# Server_name & proxy_pass ஐ முறையே
"example2.com www.example2.com" & "http://127.0.0.1:4000" உடன்
மாற்றுவதை உறுதிப்படுத்தவும்.
# sites-available கோப்புறையிலிருந்து sites-enabled
கோப்புறைக்கு சேவையக தொகுதிகளுக்கான குறியீட்டு இணைப்புகளை
உருவாக்கவும்
$ sudo ln -s /etc/nginx/sites-available/example1.com
/etc/nginx/sites-enabled/
$ sudo ln -s /etc/nginx/sites-available/example2.com
/etc/nginx/sites-enabled/
# sites-enabled கோப்புறையிலிருந்து default கோப்பை நீக்கு
$ sudo rm /etc/nginx/sites-enabled/default
Nginx சேவையகத்தைத் தொடங்கவும்
# தொடங்க மற்றும் நிறுத்த nginx
$ sudo service nginx start
$ sudo service nginx stop
# ஏதேனும் பிழைகள் இருந்தால் nginx ஐ சோதிக்க
$ sudo nginx -t
# Nginx ஐ மறுதொடக்கம் செய்ய
$ sudo systemctl restart nginx
PM2 வடிவமைப்புகள்
கீழேயுள்ள கோப்புறை இடத்தில் இரண்டு nuxt செயலிகள் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது
/home/user/examle1/
/home/user/example2/
# PM2 ecosystem.config.js கோப்பை உருவாக்கவும்.
"PM2 init" கட்டளை ecosystem.config.js கோப்பை உருவாக்குகிறது
$ cd /home/user/
$ sudo PM2 init
# nano எடிட்டரில் ecosystem.config.js கோப்பைத் திருத்தவும்
$ sudo nano ecosystem.config.js
# கீழே உள்ள அமைப்புகளை உள்ளிடவும்
module.exports = {
apps : [
{ name: 'example1',
port: 3000,
exec_mode:'cluster',
script: "./node_modules/nuxt/bin/nuxt.js",
cwd:'./example1/',
args: 'start',
},
{ name: 'example2',
port: 4000,
exec_mode:'cluster',
script: "./node_modules/nuxt/bin/nuxt.js",
cwd:'./example2/',
args: 'start',
}
]
}
# கோப்பை சேமித்து மூடவும்
செயலிகளை தொடங்கவும்
கீழேயுள்ள கட்டளை example1 & example2 செயலிகளைத் தொடங்க உதவும். வெற்றிகரமாக உள்ளமைத்துள்ள செயலிகளை, நீங்கள் உலாவியில் http://example1.com
& http://example2.com
என சோதிக்கலாம்.
$ PM2 start
மேலே உள்ள கட்டுரைக்கான குறிப்பு மூலம்:
https://www.digitalocean.com/community/tutorials/how-to-set-up-nginx-server-blocks-virtual-hosts-on-ubuntu-16-04
https://nuxtjs.org/faq/nginx-proxy/
வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்