காற்று மாசுபாட்டுத் தரவு - தமிழ் நாடு; நிலையம்: ஆலந்தூர் பஸ் டிபோட், சென்னை - CPCB

வழங்கியவர் தி டேட்டா டாக்ஸ் . 14 Mar 2020

காற்று மாசுபாட்டை தொடர்ந்து கண்காணிக்க தமிழகத்தில் 5 நிலையங்கள் உள்ளன. அவற்றில் 4 நிலையங்கள் சென்னையிலும், ஒரு நிலையம் கோவையிலும் உள்ளன. இந்த பதிவில் அலந்தூர் பஸ் டிப்போ, சென்னை, நிலையத்திற்கான PM2.5 (2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட துகள்கள்) பற்றி பார்க்கப்போகிறோம்.

பகுப்பாய்வின் முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

PM2.5 தரவு 5.3% வெளிப்புற தரவு புள்ளிகளை (outlier) கொண்டுள்ளது மற்றும் வெளிப்புற தரவு புள்ளிகளின் விவரங்கள் கீழே உள்ள பகுப்பாய்வில் கொடுக்கப்பட்டுள்ளன. வெளிப்புற தரவு புள்ளிகளை அகற்றிய பின் PM2.5 நிலை, கோடைகாலம் மற்றும் பருவமழை காலம்-I இல் “மிதமான” பிரிவின் கீழ் வருகிறது மற்றும் மற்ற பருவங்களில் “உணர்திறன் குழுக்களுக்கு ஆரோக்கியமற்றது” (sensitive group) பிரிவின் கீழ் வருகிறது.

வார மற்றும் வார இறுதி நாட்களில் PM2 .5 நிலையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை.

தரவு / தகவல்கள்:

தரவு மூலம்: https://app.cpcbccr.com/
பதிவிறக்கம் செய்யப்பட்ட தேதி: 07-Jan-2020

மொத்தம் 18962 பதிவுகள் கிடைத்தன, இவைகளில் 4468 பதிவுகள் “எதுவுமில்லை” (none/NA) பதிவுகளை கொண்டிருந்தன. இந்த பகுப்பாய்விற்கு அனைத்து “எதுவுமில்லை” பதிவுகளும் அகற்றப்பட்டுள்ளன. இந்த பகுப்பாய்வு ஆர் நிரலாக்கத்தைப் (R programming) பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது.

2012 EPA (அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம்) PM2.5 தரத்தில் வரையறுக்கப்பட்ட பிரிவுகள் கீழே உள்ளன.

நல்லது - 0.0 - 12.0 µg / m3, 24 மணி நேர சராசரி
மிதமான - 12.1 - 35.4 µg / m3, 24 மணி நேர சராசரி
உணர்திறன் குழுக்களுக்கு ஆரோக்கியமற்றது - 35.5 - 55.4 µg / m3, 24 மணி நேர சராசரி
ஆரோக்கியமற்றது - 55.5 - 150.4 µg / m3, 24 மணி நேர சராசரி
மிகவும் ஆரோக்கியமற்றது - 150.5 - 250.4 µg / m3, 24 மணி நேர சராசரி
அபாயகரமான - 250.5 - 350.4 µg / m3, 24 மணி நேர சராசரி
அபாயகரமான - 350.5 - 500 µg / m3, 24 மணி நேர சராசரி

வெளிப்புற தரவு புள்ளிகளின் (outlier) விவரங்கள்:

1.5 மடங்கு இடைநிலை காலாண்டு வரம்பிற்கு(IQR) வெளியே இருக்கும் எந்த தரவு புள்ளியும் ஒரு வெளிப்புற தரவு புள்ளியாகும்(outlier). 25வது சதவிகிதத்திற்கும் 75வது சதவிகித மதிப்புகளுக்கும் இடையிலான தூரத்தை கொண்டு மாறிகளுக்கான IQR மதிப்பு கணக்கிடப்படுகிறது. ஆர்-கட்டளை “பாக்ஸ் ப்ளாட்” ஐப் (R-command “BoxPlot”) பயன்படுத்தி வெளிப்புற தரவு புள்ளிகளை அடையாளம் கண்டுள்ளோம்.

வெளிப்புற தரவு புள்ளிகளாக அடையாளம் காணப்பட்ட பதிவுகளின் குறைந்தபட்ச (minimum), அதிகபட்ச (maximum), சராசரி (mean) மற்றும் இடை புள்ளி (median) விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Min. 1st Qu. Median Mean 3rd Qu. Max.
116.0 130.1 154.2 272.1 252.8 1000.0

கீழேயுள்ள பெட்டி விளக்கப்படம் மற்றும் பட்டை நிழல் படம், மூல தரவுகளில் இருந்து வெளிப்புற தரவு புள்ளிகளை நீக்கிய பதிவுகளின் கூட்டிற்கும் வெளிப்புற தரவு புள்ளிகளை நீக்காத பதிவுகளின் கூட்டிற்கும் உள்ள வேறுபாட்டை / தொடர்பை காட்டுகிறது

அடையாளம் காணப்பட்ட வெளிப்புற தரவு புள்ளிகள்: 731
வெளிப்புற தரவு புள்ளிகளின் விகிதம்: 5.3%
வெளிப்புற தரவு புள்ளிகளின் சராசரி: 272.11
வெளிப்புற தரவு புள்ளிகளை அகற்றும் முன் சராசரி: 51.32
வெளிப்புற தரவு புள்ளிகளை அகற்றிய பின் சராசரி: 39.59

ஒவ்வொரு ஆண்டுக்கும் வெவ்வேறு பருவங்களுக்கு மணிநேர PM2.5 இன் சராசரி:

மூல தரவுகளிலிருந்து வெளிப்புற தரவு புள்ளிகளை(outlier) அகற்றிய பின்னர் கீழே உள்ள அனைத்து முடிவுகளும் கணக்கிடப்பட்டன.

முதல் அட்டவணை PM2.5 இன் மாத சராசரியை காட்டுகிறது மற்றும் இரண்டாவது அட்டவணை ஒவ்வொரு மாதத்திற்கும் 24 மணிநேர சராசரியைக் காட்டுகிறது.

## 01 02 03 04 05 06
## month name “Jan” “Feb” “Mar” “Apr” “May” “Jun”
## monthly_mean “58.68” “37.63” “33.7” “23.12” “31.18” “25.11”
## 07 08 09 10 11 12
month name “Jul” “Aug” “Sep” “Oct” “Nov” “Dec”
monthly_mean “27.77” “26.32” “33.19” “38.85” “46.42” “57.96”
Day 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
1 52.98 42.51 37.27 17.63 46.23 20.21 15.66 28.4 38.77 30.19 29.07 43.55
2 52.28 43.55 48.86 15.44 44.13 19.05 29.36 31.69 31.94 25.4 33.48 30.6
3 61 37.35 48.75 12.7 45.53 29.55 26.49 28.88 36.39 21.25 40.45 45.24
4 66.1 24.51 50.95 12.19 46.44 49.38 38.36 18.73 39.89 25.97 43.58 41.12
5 70.32 35.14 45.21 14.16 43.97 40.08 24.66 21.52 36.8 28.72 44.31 49.12
6 67.06 35.56 40.41 13.26 45.87 13.02 31.38 22.53 41.69 22.59 48.82 49.26
7 58.8 35.93 35.83 9.36 45.65 39.98 41 16.8 49.79 32.2 44.19 83.2
8 64.47 36.1 42.33 11.6 54.67 NA 45.59 21.06 36.17 32.6 45.96 90.24
9 61.39 27.34 35.04 14.41 32.49 NA 29.2 22.2 40.15 42.61 64.42 87.14
10 68.21 34.99 36.11 10.78 NA NA 18.78 23.63 37.07 40.37 73.87 86.97
11 68.29 40.25 30.37 29.73 10.93 NA 23.59 19.03 36.97 28.56 65.88 85.04
12 61.96 40.98 28.35 21.36 NA NA 37.09 21.63 33.95 35.78 61.87 65.9
13 58.22 60.08 29.9 20.68 NA 20.8 34.37 24.83 36.3 35.1 57.28 37.1
14 65.46 40.22 30.26 18.8 42.58 NA 33.8 24.44 34.83 37.94 41.7 49.72
15 73.58 56.58 32.33 17.59 24.93 NA 25.11 15.42 22.01 34.27 39.26 77.61
16 67.75 42.17 30.9 10.61 21.25 NA 28.6 21.71 23.78 30.57 47.08 42.46
17 70.55 47.05 32.93 9.05 23.2 NA 31.42 14.83 26.42 47.07 48.07 57.83
18 67.79 36.76 43.95 6.71 28.2 NA 30.45 11.35 24.91 49.6 31.82 61.1
19 61.67 23.66 39.34 5.14 23.32 NA 18.07 18.14 23.09 53.75 33.76 37.94
20 64.51 33.75 45.87 9.08 14.59 32.25 20.56 23.7 40.68 53.36 32.47 52.28
21 69.31 42.9 36.43 13.84 15.12 36.13 19.75 34.46 38.96 51.96 19.64 42.35
22 58.65 32.4 28.42 31.23 15.13 25.32 24.62 37.28 40.91 40.81 32.71 50.28
23 39.61 32.92 29.14 45.56 18.3 25.51 40.04 32.76 35.77 65.82 63.62 52.6
24 46.57 33.58 27.31 45.77 22.23 17.25 22.62 24.81 27.66 57.25 73.51 60.42
25 52.81 30.93 26.65 45.42 21.49 21.18 27.55 30.78 24.75 48.1 45.56 71.05
26 39.03 28.91 27.63 45.33 23.96 28.68 17.86 24.3 30.13 50.98 55.89 77.88
27 43.95 35.31 26.75 45.75 22.53 26.47 20.52 30.66 20.19 52.32 48.19 75.65
28 44.16 45.97 20.38 44.44 51.21 30.78 27.24 29.77 30.87 52.83 51.65 55.61
29 48.88 NA 19.22 46.21 27.54 12.41 21.49 36.25 29.43 39.75 41.76 57.17
30 48.21 NA 15.26 44.17 32.73 1 29.19 38.09 20.58 19.67 36.71 58.84
31 48.65 NA 23.7 NA 25.06 NA 28.06 34.68 NA 33.92 NA 51.37

பருவ வகைப்பாடு:

  • ஜனவரி & பிப்ரவரி - குளிர்காலம்
  • மார், ஏப்ரல் & மே - கோடை
  • ஜூன், ஜூலை, ஆகஸ்ட் & செப் - பருவமழை-I
  • அக், நவம்பர் & டிசம்பர் - பருவமழை-II

கீழே உள்ள புள்ளி விளக்க படம் ஒவ்வொரு ஆண்டின் வெவ்வேறு பருவங்களுக்கான மணிநேர PM2.5 நிலைகளின் விவரங்களைக் காட்டுகிறது.
இந்த வரைபடங்களில் உள்ள நீலக்கோடு மென்மையாக்கப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்ட சராசரியை (Smoothed conditional means) காட்டுகிறது.

கீழேயுள்ள தரவுகளிலிருந்து, மற்ற பருவங்களுடன் ஒப்பிடும்போது மழைக்காலத்தில் மாசு அளவு குறைவாக உள்ளது என்பது மிகவும் தெளிவாகிறது.

வார இறுதி மற்றும் வாரநாளுக்கு மணிநேர PM2.5 சராசரி:

கீழே உள்ள புள்ளி விளக்க படம் வார மற்றும் வார இறுதி நாட்களின் மணிநேர PM2.5 நிலைகளின் விவரங்களை காட்டுகிறது.

இந்த வரைபடங்களில் உள்ள நீலக்கோடு மென்மையாக்கப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்ட சராசரியை காட்டுகிறது.

கீழே உள்ள விளக்க படங்களில் இருந்து வார நாட்கள் மற்றும் வார இறுதிகளில் PM2.5 நிலைகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை என்பதை அறியலாம்.

*.CSV வடிவத்தில் தகவல்களை பதிவிறக்கம் செய்ய ஆலந்தூர் காற்று மாசுபாடு

வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்