இந்தியாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் பகுப்பாய்வு
வழங்கியவர் தி டேட்டா டாக்ஸ். 17 Feb 2019
ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளான மொத்த உள்நாட்டு உற்பத்தி, வெளிநாட்டு நாணய மாற்று வீதம், வர்த்தக பற்றாக்குறை, வெளிநாட்டு நாணய இருப்பு, பொருளாதார வீக்கம், நாட்டின் வர்த்தக கொள்கைகள், நாட்டின் நடப்புக் கணக்கு, பொருட்களின் தரம், உற்பத்தி திறன் & தொழிலாளர் மதிப்பு இவைகளை பற்றி ஆராய்வதே இந்த பகுப்பாய்வின் நோக்கம்.
மேலே கூறிய காரணிகளில் தற்போது கிடைத்துள்ள அளவிடக்கூடிய பின் வரும் காரணிகளை மட்டுமே இந்த பகுப்பாய்வில் எடுத்துக்கொண்டுள்ளோம்.
தேவையான தகவல்கள் மேலே குறிப்பிட்ட வலைத்தளங்களின் பல்வேறு துணை பக்கங்களில் உள்ளன மற்றும் தேவையான தகவல்களை கைமுறையாக நகலெடுத்துள்ளோம். அப்படி எடுத்துள்ள காரணிகளை கீழே குறிப்பிட்டுள்ளோம்.
Year - நிதி ஆண்டின் முடிவு - 1998 என்பது 1997-1998 நிதியாண்டைக் குறிக்கிறது
Import.INR.lacs. - மொத்த இறக்குமதி மதிப்பு “லட்சம் INR”
Import.USD.millions. - மொத்த இறக்குமதி மதிப்பு “மில்லியன் USD”
Export.INR.lacs. - மொத்த ஏற்றுமதி மதிப்பு “லட்சம் INR”
Export.USD.millions. - மொத்த ஏற்றுமதி மதிப்பு “மில்லியன் USD”
Exchange.rate - வெளிநாட்டு நாணய மாற்று வீதம்(ஏற்றுமதி INR & USD மதிப்புகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது)
Trade.deficit.INR.lacs. - வர்த்தக பற்றாக்குறை-(இறக்குமதி-ஏற்றுமதி) “லட்சம் INR”(கணக்கிடப்பட்டுள்ளது)
Trade.deficit.USD.millions. - வர்த்தக பற்றாக்குறை-(இறக்குமதி-ஏற்றுமதி) “மில்லியன் USD”(கணக்கிடப்பட்டுள்ளது)
FC.Reserve.INR.lacs. - வெளிநாட்டு நாணய இருப்பு “லட்சம் INR”
FC.Reserve.USD.millions. - வெளிநாட்டு நாணய இருப்பு “மில்லியன் USD”
மேலே குறிப்பிட்டுள்ள காரணிகளின் INR & USD மதிப்புகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டவை.
பகுப்பாய்வு-1: இறக்குமதி, ஏற்றுமதி & வர்த்தக பற்றாக்குறை
கீழே உள்ள வரி விளக்கப்படம் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் வர்த்தக பற்றாக்குறையை காட்டுகிறது. INR & USD மதிப்புகளுக்கு தனித்தனி வரைபடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புள்ளிக்கும் மேலே குறிப்பிடப்பட்ட சதவீத மதிப்புகள், முந்தைய ஆண்டு மதிப்பிலிருந்து “நேர்மறை வளர்ச்சி” / “எதிர்மறை வளர்ச்சி” யை குறிக்கிறது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகள் நேர்முக தொடர்பை கொண்டுள்ளன
இறக்குமதிக்கு எதிராக வர்த்தக பற்றாக்குறை சில நேரங்களில் நேர்முகமாகவும் சில நேரங்களில் எதிர்முகமாகவும் செயல்படுகிறது
அமெரிக்க டாலர் வரைபடம் INR உடன் ஒப்பிடும்போது பெரும்பாலும் அதிக
சதவிகித மாற்றத்தை கொண்டுள்ளது. இது USD அதிக உணர்திறன் கொண்டதை குறிக்கிறது.
முதல் வீழ்ச்சி 2009 க்குப் பிறகு ஏற்பட்டது, அது ஒரே வருடத்தில் மீட்சி அடைந்தது
2013 இல் ஏற்பட்ட இரண்டாவது வீழ்ச்சி 2018 வரை மீட்சி அடையவில்லை , மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு மீட்சி அடைய தொண்டங்கியது.
மற்றும் 2013 முதல் 2017 வரை ஒரு தேக்க நிலையை காணலாம்.
பகுப்பாய்வு-2: இறக்குமதி, ஏற்றுமதி & வெளிநாட்டு நாணய மாற்று வீதம்
கீழே உள்ள புள்ளி விளக்கப்படம் வெளிநாட்டு நாணய மாற்று வீதத்திற்கு எதிரான இறக்குமதி, ஏற்றுமதி மதிப்பை காட்டுகிறது. INR & USD மதிப்புகளுக்கு தனித்தனி வரைபடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நடைமுறையில் இந்த நிலைமை சாத்தியமில்லை.
தரவு புள்ளிகள் சிதறியுள்ளதால், ஒவ்வொரு விளக்கப்படத்திலும் ஒரு நேரியல் பின்னடைவு மாதிரியைச் சேர்த்துள்ளோம்.
வெளிநாட்டு நாணய மாற்று வீதம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புடன் நேர்முக தொடர்பை கொண்டுள்ளதை நேரியல் சமன்பாட்டு வரி தெளிவாகக் காட்டுகிறது.
பகுப்பாய்வு-3: இறக்குமதி, ஏற்றுமதி & வெளிநாட்டு நாணய இருப்பு
கீழே உள்ள வரி விளக்கப்படம் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு நாணய இருப்பு காரணிகளை காட்டுகிறது. INR & USD மதிப்புகளுக்கு தனித்தனி வரைபடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புள்ளிக்கும் மேலே குறிப்பிடப்பட்ட சதவீத மதிப்புகள், முந்தைய ஆண்டு மதிப்பிலிருந்து “நேர்மறை வளர்ச்சி” / “எதிர்மறை வளர்ச்சி” யை குறிக்கிறது. இந்த வரைபடத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை பாதிக்கும் மற்ற அனைத்து மாறிகளும் மாறிலிகளாக கருதப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலர் வரைபடம் INR உடன் ஒப்பிடும்போது பெரும்பாலும் அதிக
சதவிகித மாற்றத்தை கொண்டுள்ளது. இது USD அதிக உணர்திறன் கொண்டதை குறிக்கிறது.
USD வரைபடம் 2012, 2013. 2014 ஆண்டுகளுக்கு தேக்க நிலையை காட்டுகிறது. மாறாக INR வரைபடம் வளர்ச்சியை காட்டுகிறது. இந்த வேறுபாட்டிற்கு பண வீக்கம் காரணமாக இருக்கலாம்.
வெளிநாட்டு நாணய இருப்பு 2012 முதல் தேக்க நிலையை கொண்டுள்ளது மற்றும் இது 2017 முதல் மீட்சி அடைய தொடங்கியுள்ளது.
பகுப்பாய்வு-4: இறக்குமதி, ஏற்றுமதி, வெளிநாட்டு நாணய இருப்பு & வெளிநாட்டு நாணய மாற்று வீதம் இவைகளின் ஆண்டு வளர்ச்சி வீதம்
INR மற்றும் USD வரைபடங்கள் ஒரேமாதிரியாக தோன்றுகின்றன மற்றும் கீழே உள்ள முடிவுகள் USD வரைபடத்திலிருந்து நிறுவப்பட்டவை.
ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக வளரும்போது, வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பதன் உணர்திறன் அதிகம்.
இதேபோல் இறக்குமதி ஏற்றுமதியை விட குறையும் போது, வர்த்தக பற்றாக்குறை குறைவதன் உணர்திறன் அதிகம்.
மொத்தமுள்ள 9 ஆண்டுகளில் (2001-2019) 7 ஆண்டுகள் அனைத்து காரணிகளும் நேர்மறை/எதிர்மறை வளர்ச்சியை ஒருமுகமாக கொண்டுள்ளன.
2011 & 2012, 2017 & 2018 தவிர, முந்தைய ஆண்டில் வெளிநாட்டு நாணய இருப்பு குறையும் போது எப்போதும் நடப்பு ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி குறைகிறது. மேலே கூறப்பட்ட ஆண்டுகளின் விதிவிலக்கு முந்தைய/அடுத்தடுத்த ஆண்டுகளில் (2010, 2013 மற்றும் 2019 ) ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியின் காரணமாக இருக்கலாம்.