கூட்டு வட்டி கணக்கிக்கு இங்கே சொடுக்கவும்.
தொடர் வைப்பு நிதி கணக்கிக்கு இங்கே சொடுக்கவும்.
மறு முதலீடு - பதவிளக்கம்:
வட்டித் தொகையானது காலாண்டிற்கொருமுறை கணக்கிடப்பட்டு அவ்வட்டித்தொகையினை மறு முதலீடு செய்து கூட்டு வட்டி கணக்கிடப்படுவதாகும்.
(குறிப்பு: இந்தியாவின் அனைத்து வங்கிகளும் காலாண்டிற்கொருமுறை கூட்டு வட்டியை கணக்கிடுவதால், இந்த விளக்கவுரை அதனடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.)
கூட்டுவட்டி கணக்கிடப்படும் முறை:
- முதலில் மூன்று மாதங்களுக்கான சாதாரண வட்டியை கணக்கிடவேண்டும்.
இதற்கான சூத்திரம் -> i = (P * N * R)/100
இங்கு
i = வட்டித்தொகை
P = அசல்(முதலீட்டுத் தொகை)
N = காலம்(மாதங்களின் எண்ணிக்கை)
R = வட்டி விகிதம்(ஆண்டுக்கு)
உதாரணத்திற்கு,
அசல் P = ரூ 1 எனக் கொள்க
காலம் N = 3 மாதங்கள்
வட்டிவிகிதம் R = 6 விழுக்காடு
இதன்படி 3 மாதங்களுக்கான சாதாரண வட்டி = (PNR)/100 = 1* 3/12* 6/100 = 0.015 ரூபாய்
- மேற்படி கணக்கிட்ட வட்டித் தொகை ரூபாய் 0.015 ஐ அசல் தொகையான ரூ 1 /- வுடன் கூட்டி வரப்பெற்ற தொகையினை (1+0.015 = 1.015) அடுத்த காலாண்டிற்கான அசல் தொகையாக கொள்ள வேண்டும்.
மேற்படி வட்டித்தொகைக்கும் வட்டி வேண்டும் என்பதற்காகவே அதனை அசலோடு சேர்க்கவேண்டியுள்ளது. இதுவே மறு முதலீடு என்று சொல்லப்படுகிறது.
தற்போது அடுத்த காலாண்டிற்க்கான மேற்படி மறுமுதலீட்டுத் தொகைக்கு சாதாரண வட்டியை கணக்கீடு செய்யவேண்டும்.
வடித்தொகை(i) = PNR/100 (இங்கு P=1.015, N=3 & R = 6%)
= 1.015* 3/12* 6/100
= 0.015225
தற்போது இந்த வட்டித்தொகையை, அசல் தொகையான ரூ 1.015 வுடன் கூடினால், நமக்கு 2 காலாண்டுகள் முடிவில் அசலும் கூட்டுவட்டி அடிப்படையிலான வட்டித்தொகையும் (அதாவது முதிர்வுத்தொகை) கிடைக்கப்பெறும்.
முதிர்வுத்தொகை = 1.015 + 0.015225 = ரூ 1.030225
- இவ்வாறாக முதலீடு செய்யப்பட்ட வைப்புத்தொகை எத்தனை காலாண்டுக்காக இட்டு வைக்கப்பட்டுள்ளதோ அத்தனை காலாண்டுகளுக்கும் கணக்கீடுகளை மேற்சொன்னவாறு கணக்கிட்டு முதிர்வு தொகையினை கண்டறியலாம்.
- இவ்வாறு ஒவ்வொரு காலாண்டிற்கும் முதிர்வு தொகையை கணக்கிடுவதை ஒரு சூத்திரத்தின் வாயிலாகவும் கணக்கிடலாம்.
“நிலையான வைப்பு மறு முதலீட்டு” திட்டத்திற்க்கான சூத்திரம்:
Mv = [(P *N *R)+1]Q
இங்கு
Mv = முதிர்வுத் தொகை
P = அசல்(1 ரூபாய்)
N = காலம் - 3 மாதங்கள்
R = வட்டி விகிதம்(ஆண்டுக்கு)
Q = காலாண்டுகளின் எண்ணிக்கை
உதாரணத்திற்கு 6% ஆண்டு வட்டி மற்றும் 2 காலாண்டுகளுக்கு கூட்டுவட்டி அடிப்படையில் முதிர்வுத் தொகையை கணக்கிடவேண்டுமென்று கொள்வோமேயானால்
Mv = [(1* 3/12 * 6/100)+1]2 = 1.030225 (ரூபாய்)
உதாரணத்திற்கு அசல் 15,000/- ரூபாய், 6% ஆண்டு வட்டி மற்றும் 3 ஆண்டுகளுக்கு(அதாவது 12 காலாண்டுகள்) கூட்டுவட்டி அடிப்படையில் முதிர்வுத் தொகையை கணக்கிடவேண்டுமென்று கொள்வோமேயானால்.
Mv = 15000 * [(1 *3/12 *6/100)+1]12 = 17,934.27 (ரூபாய்)
“மாதாந்திர தொடர் வைப்பு மறு முதலீட்டு” திட்டத்திற்க்கான சூத்திரம்:
இந்த முறையில் அசலானது ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்க்கான முதிர்வுத் தொகையை கணக்கிட, இங்கு நாம் தள்ளுபடி காரணி முறையை(Discount factor method) பின்பற்றப் போகிறோம்.
(குறிப்பு: வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்படும் போது, வாடிக்கையாளர் மாதாந்திர அடிப்படையில் வட்டியை பெற விரும்பினால் தள்ளுபடி காரணி(Discount factor) பயன்படுத்தப்படும். இதைப்பற்றி மற்றொரு பதிவில் காணலாம்.)
தள்ளுபடி வட்டி காரணிக்கான சூத்திரம்:
(Discount Interest Factor):
x = (P * R) / (1200+R)
இங்கு
x = தள்ளுபடி வட்டி காரணி
P = அசல்(1 ரூபாய்)
R = வட்டி விகிதம்(ஆண்டுக்கு)
முதிர்வு தொகைக்கான சூத்திரம்:
Mvrd = ((x+1)(n+1) - (x+1)) / (x)
இங்கு
Mvrd = முதிர்வுத் தொகை
x = தள்ளுபடிக் காரணி
n = மாதங்களின் எண்ணிக்கை
உதாரணத்திற்கு மாதாந்திர தொடர் வைப்பு 1,000/- ரூபாய், 6% ஆண்டு வட்டி மற்றும் 3 ஆண்டுகளுக்கு(அதாவது 12 காலாண்டுகள்) தொடர் கூட்டுவட்டி அடிப்படையில் முதிர்வுத் தொகையை கணக்கிடவேண்டுமென்று கொள்வோமேயானால்.
x = (1 * 6)/ (1200+6) = 0.0049751
Mvrd = 1000 * ((0.0049751+1) (12+1) - (0.0049751+1)) / (0.0049751)
= 1000 * 12.3952256
= 12,395.23 (ரூபாய்)
வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்