In the end, how your investment behave is much less important than how
you behave
— Benjamin Graham
கீழே உள்ள வரி விளக்கப்படத்தில்
தகவல்களின் மூலம்:
Nifty50 ஈட்டம் -
https://www1.nseindia.com
10-வருட பத்திர ஈட்டம் -
https://in.investing.com
தகவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட காலம் 1999 முதல் 2020
பெஞ்சமின் கிரஹாம் அவர் தன்னுடைய புத்தகத்தில் ஒருவர் தன்னுடைய முதலீட்டில் குறைந்தது 25% பங்குச் சந்தையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றும் இந்த சதவீதம் பத்திர ஈட்டிற்கும், பங்கு ஈட்டிற்கும் உள்ள தொடர்பை பொறுத்து மாறவேண்டும். இந்த மாற்றம் தற்காப்பு முதலீட்டாளர் மற்றும் துணிகர முதலீட்டாளர் என்ற இருவருக்கும் பொருந்தும். மற்றும் மேலே கூறப்பட்ட தொடர்பு அணைத்து பத்திர கொள்கையை நியாயப்படுத்தும்.
ஒரு முதலீடு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று திட்டவட்டமான விதிகளின் தொகுப்பு எதுவும் இல்லை. அனைத்து முதலீட்டாளர்களும் குறைந்த விலையில் பங்குகளை வாங்கி அதிக விலைக்கு விற்க வேண்டும், ஆனால் இது பெரும்பாலோர்க்கு மாறாகவே நடைபெறுகிறது.
மேலே உள்ள வரி விளக்கப்படம் 10-வருட பத்திர ஈட்டத்திற்கும் Nifty50 மொத்த ஈட்டத்திற்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது. Nifty50 மொத்த ஈட்டம் என்பது லாப பங்கு (டிவிடெண்ட் / Dividend) ஈட்டம் மற்றும் பங்குகளின் வருவாய் ஈட்டத்தின் கூட்டுத்தொகையை குறிக்கிறது.
10-வருட பத்திர ஈட்டம் - கூப்பன் ரேட் / பத்திர தொகையின் வட்டி ஈட்டம்
Nifty50 மொத்த ஈட்டம் - லாப பங்கு (டிவிடெண்ட்) ஈட்டம்+பங்குகளின் வருவாய் ஈட்டம்
லாப பங்கு (டிவிடெண்ட் / Dividend) ஈட்டம் - லாப பங்கு / பங்கு மதிப்பு
பங்குகளின் வருவாய் ஈட்டம் - EPS / பங்கு மதிப்பு
EPS - ஈட்டம் (வருவாய்) / பங்கு
மேலே உள்ள வரி விளக்கப்படத்தின் முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
Nifty50 ஈட்டம் கீழ்க்கண்ட காலங்களுக்கு மட்டுமே பத்திர ஈட்டத்தை விட அதிகமாக உள்ளது
மேற்கூறிய காலங்களைத் தவிர, மற்ற காலங்களில் Nifty50 ஈட்டம் எப்போதும் 10 -வருட பத்திர ஈட்டத்தை விட குறைவாகவே இருக்கிறது.
5036 நாட்களில், Nifty50 ஈட்டம் 1033 நாட்களுக்கு மட்டுமே பத்திர ஈட்டத்தை விட அதிகமாக உள்ளது.
## [1] 1033
Min. | 1st Qu. | Median | Mean | 3rd Qu. | Max. | NA’s |
---|---|---|---|---|---|---|
0.4160 | 0.7194 | 0.7979 | 0.8925 | 0.9394 | 2.0966 | 142 |
*.CSV வடிவத்தில் தகவல்களை பதிவிறக்கம் செய்ய Nifty50 ஈட்டம் மற்றும் 10-வருட பத்திர ஈட்டம்
வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்