இந்தியா 1996 நாடாளுமன்றத் தேர்தல் - தேசியக் கூட்டணி, வாக்குப் பங்கு, வென்ற இடங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்.

வழங்கியவர் தி டேட்டா டாக்ஸ் . 19 Aug 2020

விரிவான முடிவுகளை பார்க்க https://indiaelectiondata.in/.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கிடைத்த வெற்றிகளின் எண்ணிக்கையை கீழே உள்ள பை விளக்கப்படம் காட்டுகிறது.

ஒவ்வொரு கூட்டணிக்கும் கிடைத்த வெற்றிகளின் எண்ணிக்கையை கீழே உள்ள பை விளக்கப்படம் காட்டுகிறது.

1996 தேர்தல் ஒரு தொங்கு பாராளுமன்றத்தை உருவாக்கியது. இந்த தேர்தலில் எந்த ஒரு முன்னணி கட்சியும் அல்லது தேர்தலுக்கு முன் உண்டான எந்த ஒரு கூட்டணியும் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.

மேலே உள்ள பை விளக்கப் படத்தில் தேர்தலுக்கு முன் உருவான ஒவ்வொரு கூட்டணி கட்சிகளின் வெற்றிகள் மற்றும் ஒவ்வொரு தனிப்பட்ட கட்சிகளின் வெற்றிகள் விளக்கப்பட்டுள்ளன.

தேர்தலுக்குப் பிறகு, ஒரு புதிய கூட்டணிக் கட்சி, தேசிய முன்னணி கட்சிகளால் உருவாக்கப்பட்டது. புதிய மூன்றாவது கூட்டணிக்கு யுனைடெட் ஃப்ரண்ட்(United Front) என்று பெயரிடப்பட்டது, இதில் தேசிய முன்னணி கட்சிகள்(National Front), இடது முன்னணி கட்சிகள்(Left Front), தமிழ் மாநில காங்கிரஸ்(TMC), திராவிட முன்னேற்ற கழகம்(DMK), அசோம் கானா பரிஷத்(AGP) மற்றும் சில சிறிய கட்சிகள் சேர்ந்தன.

முதலில், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் பாஜகவுக்கு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது, அது தோல்வியடைந்தது. எச்.டி. தேவகௌடா தலைமையில் மூன்றாம் முன்னணியால்(United Front), INC ஆதரவுடன் அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே நீடித்தது.

INC மீண்டும் தேசிய முன்னணியை ஆதரித்தது(National Front), ஆனால் தேவகௌடாவிற்கு பதிலாக ஐ.கே. குஜ்ரால் தலைமையில் மீண்டு ஆட்சி அமைக்கப்பட்டது. இந்த ஆட்சியும் ஒரே வருடத்தில் கலைந்தது.

59.25 கோடி வாக்காளர்களில், 34.33 கோடி பேர் வாக்கு செலுத்தினார்கள், இந்த தேர்தலின் வாக்குப்பதிவு 57.94%-ஆகக் கணக்கிடப்படுகிறது.
6.79 கோடி பேர் பாஜகவைத்(BJP) தேர்ந்தெடுத்துள்ளனர், இது 1991 தேர்தலுடன் ஒப்பிடும்போது 21.68% அதிகம்.
9.65 கோடி வாக்காளர்கள் ஐ.என்.சி.யைத்(INC) தேர்ந்தெடுத்துள்ளனர், இது 1991 தேர்தலுடன் ஒப்பிடும்போது 4.7% குறைவு.
2.70 கோடி வாக்காளர்கள் ஜே.டி.யைத்(JD) தேர்ந்தெடுத்துள்ளனர், இது 1991 தேர்தலுடன் ஒப்பிடும்போது 16.9% குறைவு.

*.CSV வடிவத்தில் தகவல்களை இந்தியா 1996 நாடாளுமன்றத் தேர்தல் இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் வென்ற வேட்பாளர் விவரங்களை கீழே உள்ள அட்டவணை காட்டுகிறது.
மதிப்புகள் முதலில் மாநிலங்களின் பெயர், பின்னர் தொகுதிகளின் பெயரால் வரிசைப்படுத்தப்படுகின்றன.

வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்