தமிழ்நாட்டை ஆண்டு வந்த தேசிய கட்சிகளின் சகாப்தம் 1967 இல் முடிவுக்கு வந்து மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்ற கழகம்(திமுக) தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி செய்யத் தொடங்கியது.
1967 முதல், மாநிலத்தை ஆள தேசியக் கட்சிகளுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்கவில்லை. அன்றிலிருந்து இருபெரும் கட்சிகளான திமுக அல்லது அஇஅதிமுக/அதிமுக (அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்) என்ற இரண்டு கட்சிகளும் தமிழ் நாட்டை ஆண்டு வந்துள்ளன. கீழே உள்ள வட்ட வரைபடமானது தமிழ்நாட்டை ஒவ்வொரு கட்சியும் எவ்வளவு காலத்திற்கு ஆட்சி புரிந்தது என்பதைக் காட்டுகிறது.
இந்திய தேசிய காங்கிரஸ்(INC) ஆட்சி செய்த காலம்: 1952-1967
திமுக(DMK) ஆட்சி செய்த காலம்: 1967-1977 & 1989-1991 & 1996-2001 & 2006-2011
அஇஅதிமுக(AIADMK) ஆட்சி செய்த காலம்: 1977-1989 & 1991-1996 & 2001-2006 & 2011-2019
1953 ஆம் ஆண்டில், மெட்ராஸ் மாநிலம் “தமிழ்நாடு” என்று மறுபெயரிடப்பட்டது மற்றும் மெட்ராஸ் மாநிலத்தின் கீழ் காணும் சில பகுதிகள் பிரிக்கப்பட்டன.
1951 தேர்தலின் போது மெட்ராஸ் மாநிலம் 309 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது. இதில் 243 தொகுதிகள் ஒற்றை உறுப்பினர் தொகுதிகள்(single-member constituencies) ஆகும். எஞ்சிய 66 தொகுதிகள் இரட்டை உறுப்பினர் தொகுதிகள்(dual-member constituencies) ஆகும்.
மேற்சொன்ன பிரிப்புகளின் காரணமாக 1957 தேர்தலின் போது தொகுதிகளின் எண்ணிக்கை 167 ஆகக் குறைத்தது. இதில் 128 தொகுதிகள் ஒற்றை உறுப்பினர் தொகுதிகள் ஆகும். எஞ்சிய 39 தொகுதிகள் இரட்டை உறுப்பினர் தொகுதிகள் ஆகும்.
இரட்டை உறுப்பினர் தொகுதி என்பது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு இரண்டு உறுப்பினர்களைத் தேர்தெடுப்பதாகும். இந்நடைமுறை உலகில் எங்கும் செயல்பாட்டில் இல்லை. இரட்டை உறுப்பினர் நீக்கல் சட்டம் 1961 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை இந்தியாவில் இரட்டை உறுப்பினர் நடைமுறை இந்தியாவில் செயல்பாட்டில் இருந்தது. 1967 முதல் தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகள் இருந்து வருகின்றன.
முதலமைச்சர்களின் பெயர், பதவியேற்ற காலம், பதவி முடிந்த காலம், ஆட்சிபுரிந்த மொத்த நாட்கள் மற்றும் அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சி போன்ற விவரங்களைக் கேழே உள்ள பட்டியல் காட்டுகிறது.
*.CSV வடிவத்தில் தகவல்களை தமிழக முதல்வர்கள் இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்