“Democracy cannot succeed unless those who express their choice are
prepared to choose wisely. The real safeguard of democracy, therefore,
is education.” ― Franklin D. Roosevelt
பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இந்தியாவிற்கு 15, ஆகஸ்டு 1947 அன்று சுதந்திரம் கிடைத்தது. 26 ஜனவரி 1950 -இல் இந்தியா குடியரசு நாடாகியது. மக்களாட்சி முறையில் இந்திய பாராளுமன்றத்திற்கான முதல் தேர்தல் 25 .10 1951 முதல் 21 .02 .1952 முடியவுள்ள காலத்தில் 68
கட்டங்களாக நடத்தப்பட்டது. இத்தேர்தலில் வெற்றிபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியானது ‘ஜவாஹர்லால் நேரு’ வை பிரதமராகக் கொண்டு ஆட்சி அமைத்தது.
இதன்படி, ஜவாஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமராக
15 .04 . 1952 அன்று பதவியேற்றுக்கொண்டார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் 15 , 1947 முதல் மேற்படி 15 .04 . 1952 வரை உள்ள காலத்திற்கு பிரிட்டிஷ் அரசாங்கமே ‘ஜவாஹர்லால் நேரு’ வை இந்திய பிரதமராக நியமனம் செய்தது.
ஜனவரி 2019 வரை, இந்தியாவில் 17 நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்ற கட்சியிலிருந்து பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு
இதுவரை 17 பிரதமர்கள் ஆட்சி செய்துள்ளனர். ஒவ்வொரு கட்சியும் ஆட்சிசெய்த காலங்களின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸ் (INC - இந்தியாவின் இடதுசாரி கட்சி)
இந்தியாவைப் பல்வேறு காலங்களில் மொத்தம் 54 .4 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி
(BJP - இந்தியாவின் வலதுசாரி கட்சி)பல்வேறு காலங்களில் மொத்தம் 11.2 ஆண்டுகள் இந்தியாவை
ஆட்சி செய்துள்ளது,
ஜனதா கட்சி (JNP/JP) இந்தியாவை மொத்தம் 2.8 ஆண்டுகள் ஆட்சி
செய்தது,
ஜனதா தளம் (JD) இந்தியாவை பல்வேறு காலங்களில் மொத்தம் 2.7 ஆண்டுகள் ஆட்சி செய்தது
சமாஜ்வாடி ஜனதா கட்சி (SJP) இந்தியாவை 0.6 ஆண்டுகள் ஆட்சி
செய்தது.
கீழேயுள்ள வட்ட(Pie) விளக்கப்படம், இந்தியாவில் பல்வேறு கட்சிகள் ஆட்சிசெய்த
காலங்களைக் காட்டுகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் மற்ற எல்லா கட்சிகளையும்விட மிக நீண்ட காலத்திற்கு இந்தியாவை ஆண்டுள்ளது.
கீழே உள்ள அட்டவணை, இந்தியப் பிரதமர்களின் ஆட்சித் தொடக்க/இறுதித் தேதி, பதவியில் இருந்த காலம்(நாட்களில்) மற்றும் அவர்கள் சார்ந்த கட்சியின் பெயர் ஆகிய விவரங்களைக் காட்டுகிறது. 2019 ஆம் ஆண்டு முடிய நிலவரப்படி “ஜவஹர் லால் நேரு” இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமராக இருந்தார்.
சுதந்திர இந்தியாவில், முதல் பொது தேர்தல் 1951 ல் நடைபெற்றது. அத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையராக “சுகுமார் சென்”(முதல் தேர்தல் ஆணையாளர்) பணியாற்றினார். அப்போது அவருக்கு இருந்த சவால்கள் பின்வருமாறு:
இந்தியாவில் 17.32 கோடி வாக்காளர்கள் இருந்தனர் & அவர்களில் பெரும்பாலோர் எழுத / படிக்க தெரியாதவர்கள் (70% க்கும் அதிகமானவர்கள்).
வாக்காளர் பட்டியலைச் சேகரிக்கச் சென்ற அலுவலர்களிடம், பெரும்பான்மையான பெண்கள் அவர்களின் பெயரை நேரடியாக தெரிவிக்க விரும்பாமல், அவர்களின் தந்தை/சகோதரர் பெயரைச் சொல்லி அவர்களின் மகள்/சகோதரி என்றே தெரிவித்தனர். அதேபோல் கணவனின் பெயரைச் சொல்லி, அவரின் மனைவி என்றும் தெரிவித்தனர்.
உதாரணமாக: தந்தை/சகோதரர்/கணவரின் பெயர் ‘X’ எனக் கொண்டால், வாக்காளர்கள் தன பெயரை ‘X’ ன் மகள்/சகோதரி/மனைவி என்றே தெரிவித்தனர்.
பல்வேறு காரணங்களுக்காக 68 கட்டங்களில் தேர்தல் நடைபெற்றது.
*.CSV வடிவத்தில் தரவுக் கோப்பை இந்திய பிரதமர்கள் இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்