அரசியல் ஸ்பெக்ட்ரம் (அரசியல் நிறமாலை) - அரசியல் அமைப்பின் அச்சு தொலைவு விளக்க படத்தின் சுருக்கமான அறிமுகம்

வழங்கியவர் தி டேட்டா டாக்ஸ் . 17 Feb 2019

அரசியல் இடது மற்றும் வலது என்ற வார்த்தைகள் பிரென்ச் சட்டமன்ற மற்றும் ஆலோசனை சபையின் 17 -ஆம் நூற்றாண்டின் இருக்கை ஏற்பாட்டைக் குறிக்கிறது.

இடது பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் முடியாட்சியை எதிர்த்ததோடு மதச்சார்பின்மையை ஆதரித்தனர் & வலது பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் பாரம்பரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்தனர். “இடது” என்ற வார்த்தையின் பயன்பாடு 1815க்குப் பிறகு மிகவும் முக்கியத்துவம் பெற்றது.

ஒரு சிறந்த சமுதாயத்திற்கு பொருளாதார விழுமியங்கள் மிக முக்கியமானவை. அது போல சமூக விழுமியங்களும் முக்கியமானவை என்று பல தலைவர்களால் கருதப்பட்டது.

வலதுசாரி

வலதுசாரி அரசியல், உறுதியான சமூக ஒழுங்கும் அதிகார படிநிலைகளும் தவிர்க்கமுடியாதவை என்ற கோட்பாட்டைக் கொண்டது.

வலதுசாரியின் முக்கியத் தகுதிகளாக பழமைவாதம், கலாச்சாரம், செயல்திறன், பாரம்பரியம், சொத்து உரிமைகள், தடையற்ற சந்தை, சட்டத்தின் ஆட்சி மற்றும் சிறிய அரசு ஆகியவைகள் கருதப்படுகின்றன.

இடதுசாரி

இடதுசாரி அரசியல் சமூக சமுத்துவத்தை ஆதரிப்பதோடு சமூகத்தின் அதிகாரப் படிநிலையை எதிர்க்கும் கோட்பாட்டைக் கொண்டது.

இடதுசாரியின் முக்கியத் தகுதிகளாக மாநில சுய அதிகாரம் மற்றும் மாநில திட்டமிடல் மூலமோ அல்லது நகராட்சி மன்றங்கள் மூலமோ பொருளாதார நிலையை நிறுவுதல் ஆகியவைகள் கருதப்படுகின்றன. (கம்யூனிசம் அல்லது ஜனநாயக சோசலிசம்)

மைய-இடதுசாரி

இடது சாரிகளின் கொள்கை உறுதிப்பாட்டில் இருந்து சற்றே விலகி மைய அரசோடு நெருங்கி நிற்பது.

மைய-வலதுசாரி

வலது சாரிகளின் கொள்கை உறுதிப்பாட்டில் இருந்து சற்றே விலகி மைய அரசோடு நெருங்கி நிற்பது.

கீழேயுள்ள வட்ட வரைபடம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கால்பகுதியிலும் குறிப்பிடத்தக்க தலைவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த தலைவர்களின் இடங்கள் அவர்களின் பொது முடிவுகள் மற்றும் அவர்களால் கொடுக்கப்பட்ட உரைகளில் இருந்து எங்களுடைய புரிதலை அடிப்படையாகக் கொண்டவை.

வட்ட வரைபடத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளும் வெவ்வேறு மதிப்புகளின் தொகுப்பை குறிக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களை ஒவ்வொரு மதிப்பு தொகுப்புகளினுடன் ஒப்பிட்டு பார்ப்பது அரிது.

கால்பகுதி - I : (ஹிட்லர், வின்ஸ்டன் சர்ச்சில்)

நவ-பழமைவாதம் - இதன் முக்கிய அம்சங்களாக தடையற்ற சந்தை, முதலாளித்துவம், தலையீட்டாளர் வெளியுறவுக் கொள்கைகள், தேசிய விழுமியங்களின் உலகளாவிய வலியுறுத்தல் ஆகியவைகள் கருதப்படுகிறன.

சர்வாதிகாரம் (அரசியல் நிறமாலையின் செங்குத்து கோட்டுக்கு அருகில்) - ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தின் இழப்பில் அதிகாரத்திற்கு ஆதரவாக இருப்பது அல்லது அதிகாரத்திற்கு கண்டிப்பான கீழ்படிதலை வலியுறுத்துவது.

பொதுவுடைமை எதிர்ப்பு(பாசிசம்) (அரசியல் நிறமாலையின் செங்குத்து கோட்டுக்கு அருகில் வருகிறது) - இதன் முக்கிய அம்சங்களாக தீவிர தேசியவாதம் மற்றும் அதிகாரப்படிநிலை ஆகியவைகள் கருதப்படுகிறன.

கால்பகுதி - II : (பிடெல் காஸ்ட்ரோ, ஜே.வி.ஸ்டாலின்)

முற்போக்குவாதம் - நல்ல கல்வி, பாதுகாப்பான சூழல் மற்றும் தரமான பணியிடத்தை சமுதாயத்திற்கு வழங்குவதன் மூலம் அச்சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை (வறுமை, வன்முறை, பேராசை, இனவாதம், வர்க்கப் போர்) எளிதில் தீர்க்க முடியும் என்று நம்புதல்.

கால்பகுதி - III : (மஹாத்மா காந்தி, வில்லியம் காட்வின், நெல்சன் மண்டேலா)

ஜனநாயகம் - மக்களால் ஆட்சி.

கால்பகுதி - IV : (கார்ல் மார்க்ஸ், மில்டன் ப்ரீட்மேன்)

தொன்மையான பழமைவாதம்(பேலியோ-கன்சர்வேடிவ்) - தொன்மைவாய்ந்த பாரம்பரிய வழக்கங்களை ஆதரிப்பது.

சுதந்திரவாதம் -சுதந்திரமே முக்கிய குறிக்கோள், இது தடையற்ற இடம்பெயர்வு, தடையற்ற வர்த்தகம், தடையற்ற சந்தை, முதலாளித்துவ எதிர்ப்பு போன்ற பல தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டது.

புதிய தாராளமயம் (அரசியல் நிறமாலையின் கிடைமட்ட கோட்டிற்கு அருகில் வருகிறது) - பொதுத் துறையிலிருந்து தனியார் துறைக்கு தடையற்ற சந்தை முதலாளித்துவம், அரசாங்க செலவினங்கள், ஒழுங்குமுறை மற்றும் பொது உடைமை ஆகியவற்றிலிருந்து விலகிச் செல்வது.

வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்