கார்லிக் சாடீட் வெஜிட்டபிள்ஸ்

வழங்கியவர் செஃப்: வேம்பு . 14 Mar 2020

தேவையான பொருட்கள்

ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பொடித்த பூண்டு - 1 டீஸ்பூன்
சிகப்பு குடை மிளகாய் - 1/2 ,நறுக்கப்பட்டது
மஞ்சள் குடை மிளகாய் - 1/2, நறுக்கப்பட்டது
கிரேமினி மஷ்ரூம்ஸ் - 6 ,நறுக்கப்பட்டது
(கிரேமினி - ஒரு பிரவுன் நிற சதைப்பிடிப்பு நிறைய உள்ள காளான் வகை. இத்தாலியன் அல்லது பிரவுன் மஷ்ரூம் என்றும் அழைக்கப்படுகிறது)

ஸுச்சினி - 1/2, நறுக்கப்பட்டது
( வெள்ளரியும் ஸுச்சினியும் பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் சுவையில் மாறுபடும் அதனால் ஸுச்சினிக்கு பதிலாக வெள்ளரியை உபயோகிக்கமுடியாது)
மஞ்சள் சம்மர் ஸ்குவாஷ் - 1/2, நறுக்கப்பட்டது
காய்ந்த ஆர்கனோ - 1/2 , டீஸ்பூன்
சோயா சாஸ் - 2, டேபிள் ஸ்பூன்
சிக்கன் ஸ்டாக் - 2, டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு பெரிய கடாயை அடுப்பில் நடுத்தர உயர் வெப்பத்தில் வைக்கவும்.
ஆலிவ் எண்ணெயை ஊற்றி சூடு பண்ணவும். பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
எல்லா காய்கறிகளையும் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்(காய்கறிகள் லேசாக வதங்கும் வரை).
ஆர்கனோ, சோயா சாஸ் மற்றும் சிக்கன் ஸ்டாக் சேர்த்து ஒரு 3 நிமிடங்கள் வதக்கவும்.(காய்கறிகள் நன்றாக வதங்கும் வரை).
கடாயிலிருந்து நீக்கி பரிமாறவும்.

வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்