1. திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு - டாக்டர் சுப. அண்ணாமலை
2. உண்மை விளக்கம் - https://shaivam.org/
3. https://thevaaram.org
ஒரு பொருளின் மீது அல்லது ஒரு விடயத்தின் மீது நாம் விருப்பம் கொள்ளவில்லை யென்றால் இந்த உலகத்தில் எந்த ஒரு செயலும் இயங்காது. அந்தப் பொருள் அல்லது விடயம் குறித்து சரியான அறிவு / உண்மை உணரப்படும் போது அதன் மீதான விருப்பம் ஏற்படுவதோடு, அந்த விருப்பத்தின் காரணமாக செயலும் நிகழும்.
இங்கு,
1. விருப்பத்தின் திறன் - (STATE-OF-DESIRE) இச்சையின் திறன்; இச்சா சத்தி; அஞ்ஞானம்; (spiritual ignorance) எனவும்,
2. அறிவின் திறன் - (STATE-OF-WISDOM) ஞான சத்தி எனவும், (energy of wisdom)
3. செயலின் திறன் - (STATE-OF-ACTION) கிரியா சத்தி; வினைத்திறன்; வினைத்துணையாக நின்று உலகங்களை யாக்குவது எனவும் கருதப்படும்
எங்கும் நிறைந்துள்ள சிவப் பரம்பொருளின் வெளிப்பட்ட பரிணாமமே இந்த உலகின் ஐம்பூதங்களாகும். அதாவது ஐம்பூதங்கள் தோற்றத்தில் வெவ்வேறாக இருந்தாலும், அதனை இயக்கும் ஆற்றல் / பொருள் ஒன்றே. ஐம்பூதங்கள் பற்றி திருமந்திரம் கூறும் கோட்பாடுகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
தத்துவ தாத்துவிகங்கள் பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்.
இப்பொழுது எங்கும் நிறைந்துள்ள சிவப் பரம்பொருளின் வெளிப்படா பரிணாமங்களைப் பற்றி பார்ப்போம்.
இலயம் – இரண்டறக்கலக்கை; oneness
நிட்களம் - உருவமின்மை; தூய்மை
சூக்குமம் - நுண்மை; கண்ணுக்கு புலனாகாது, அறிவுக்குத் தென்படும்; subtleness
ஆதியோடு அந்தம் இலாத பராபரம்
போதம் அது ஆகப் புணரும் பராபரை
சோதி அதனில் பரம் தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரை; அதன்பால் திகழ் நாதமே
- 192 – சருவசிருட்டி - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- இரண்டாம் தந்திரம்
ஆதியோடு அந்தம் இலாத பராபரம் - ஆரம்பமும் முடிவும் இல்லாத சிவப் பரம்பொருள்
போதம் அது ஆகப் புணரும் பராபரை - அறிவு / ஞானம் அது ஆக அதனுடன் கூடும் ஆற்றல்
சோதி அதனில் பரம் தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரை; அதன்பால் திகழ் நாதமே – பரம் மற்றும் பரை சேர உண்டான சோதியில் தோன்றுவது முதல் தத்துவமான நாத தத்துவமாகும்
கருத்து: பரம்(அறிவு)(PARAM) (ARIVU) பரை(செயல்)(PARAI) (PARA-SAKTHI) சேர்வதினால் சிவதத்துவத்தின் முதல் தத்துவமான நாதத் தத்துவம் பிறக்கிறது.
தூல-இலயம்
தூல-நிட்களம்
தூலம் - பருமை; கண்ணுக்குப் புலனாவது; Grossness,tangibility
நாதத்தில் விந்துவும் நாத விந்துக்களின்
தீதுஅற்று அகம் வந்த சிவம் சக்தி என்னவே
பேதித்த ஞானம் கிரியை பிறத்தலால்
வாதித்த இச்சையில் வந்து எழும் விந்துவே
- 193 – சருவசிருட்டி - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- இரண்டாம் தந்திரம்
நாதத்தில் விந்து எழும், நாத விந்துக்களின் தீமை இன்றி அகம் வந்த சிவமும் சக்தியும் மாறுபட்டு ஞானமாகவும், கிரியையாகவும் பிறத்தலால் தடைபட்ட இச்சையில் வந்து எழும் விந்துவே!
கருத்து: சிவம் என்ற ஞானத்துடன் கிரியை(KIRIYAI) என்ற செயல் பிறத்தலால் விந்து தத்துவம் பிறக்கிறது.
அளியார் முக்கோணம் வயிந்தவம் தன்னில்
அளியார் திரிபுரையாம் அவளாலே
அளியார் சதாசிவம் ஆகி அமைவார்
அளியார் கருமங்கள் ஐந்தும் செய்வாரே
- 212 – சருவசிருட்டி - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- இரண்டாம் தந்திரம்
வயிந்தவம் என்கின்ற விந்துவின் வடிவம் முக்கோணம், அந்த விந்துவிலிருந்து சதாசிவம் என்கின்ற தத்துவமாய் அமைவது திரிபுரை என்கின்ற சக்தியே. பின் சதாசிவனே ஐந்தொழில் என்கின்ற கருமங்களை செய்பவர்.
கருத்து: திரிபுரை(சத்தி)(THIRIBURAI) விந்துவிலிருந்து சதாசிவ தத்துவத்தை தோற்றுவித்து ஐந்து தொழில்களை செய்கின்றாள்.
உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதயமாம்
மற்றைய மூன்றும் மாமாயோதயம் விந்து
பெற்ற அந்நாதம் பரையில் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல் விளையாட்டு அதே
- 210 – சருவசிருட்டி - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- இரண்டாம் தந்திரம்
உற்ற – நிகழ்ந்த செயல்
முப்பால் - மூன்று பகுதி
மாயாள் – மாயை
மாமாயோதயம் – மாமாயை (சுத்த மாயை) உதயம்
பெற்ற - பெற்றவன்
துற்ற - நெருக்கமாகக் கொண்ட / உண்ட
உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதயமாம் - “மாயை உதயமாம். மாயை ஒன்று. அதில் நிகழ்ந்த செயல் மூன்று பகுதி”
மற்றைய மூன்றும் மாமாயோதயம் – “அந்த மாயையில் உதயமாகிய மற்றைய மூன்றும் சுத்த மாயை”
விந்து பெற்ற அந்நாதம் பரையில் பிறத்தலால் - அந்த மூன்றிற்கும் மேலே உள்ள விந்து நாதத்தில் பிறக்கும். அதற்கு மேல் உள்ள நாதம் பராசக்தியிடம் பிறக்கும்
துற்ற பரசிவன் தொல் விளையாட்டு அதே - ஆதலால் எல்லாம் சக்தி-சிவன் விளையாட்டாகும்
கருத்து: மாயை மூன்று – சுத்தம், சுத்தாசுத்தம் & அசுத்தம். சுத்த மாயையில் இருந்து தோன்றியவை மூன்று - சதாசிவம், ஈசுரம் & சுத்தவித்தை. இந்த மூன்றிற்கும் மேலே உள்ள விந்து நாதத்தில் பிறக்கும். அதற்கு மேல் உள்ள நாதம் பராசக்தியிடம் பிறக்கும்.
சதாசிவன் - அறிவும் செயலும் சமநிலையில் இருந்து அருளல்(ARULAL-1 THE-EMBODIMENT-OF-GRACE) செய்கின்றான்
ஈசுரன் / மயேச்சுரன் - செயல் திறன் மிகுந்து மறைத்தல் (MARAITHAL-2 STATE-OF-HIDING-THE-WISDOM) செய்கின்றான்
சுத்த வித்தை - அறிவுத் திறன் மிகுந்து பின்வரும் காரிய காரண (KARANA-KARIYAM CAUSES-AND-EFFECT) செயல்களை செய்கின்றான்
1. அயன் / பிரமன் (AYAN) - படைத்தல் (PADAITHAL-3)
2. திருமால் (THIRUMAAL) - காத்தல் (KAATHAL-4)
3. உருத்திரன் (URUTHIRAN) – அழித்தல் (AZHITHAL-5)
காரண காரிய செயல்களான படைத்தல் காத்தல் அழித்தல் விடுபடும்போது ஈசன் உலகச் செயல்களில் இருந்து மறைத்து பின் சதாசிவனாக அருள் புரிகின்றான்.
மேலே கூறப்பட்ட ஐந்து தத்துவங்களும் ஒன்றை ஒன்று சாராதது, ஆனால் ஒன்றிலிருந்து ஒன்று விருத்திப்பட்டு (விரித்தல் அல்லது வளர்ச்சி) தோன்றும்.
மேவும் பரசிவம், மெய்ச்சத்தி, நாதமும்
மேவும் பரவிந்து, ஐம்முகன், வேறு ஈசன்
மேவும் உருத்திரன், மால், வேதா மேதினி
ஆகும்படி படைப்போன் அரணாகுமே
- 2390 – பசு பாசம் வேறின்மை - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- எட்டாம் தந்திரம்
மேன்மை உடைய பரசிவம், மெய்ச்சத்தி சேர்க்கையால் நாதமாக நின்றான்
மேன்மை உடைய பரவிந்து சேர்க்கையால் ஐந்தொழில் புரியும் ஐம்முகன் தோன்றி ஈசன் என்று மாறி நின்றான்
மேன்மை உடைய உருத்திரன், மால், வேதா மேதினி(பூமியைச் சிருட்டித்தவன் - பிரமன்) ஆகும்படி படைப்பவன் அரனே (சிவனே).
வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்