கன் பவுடர் சிக்கன்

வழங்கியவர் செஃப் வேம்பு . 14 Mar 2020

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 900 gms (எலும்பு இல்லாதது) 30 கிராம் க்யூப்ஸாக வெட்டப்பட்டவை
ரீபைன்ட் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 2 ( இரண்டாக வெட்டியது)
இஞ்சி நறுக்கியது - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு நறுக்கியது - 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த சிவப்பு மிளகாய்கள் - 15
வெங்காயம் - 25 gms (க்யூப்டு)
குடைமிளகாய் - 50 gms (டைமென்ட் கட்டிங்)
வெங்காயத்தாள் - 1 கட்டு, 2 1 /2 cm பீசஸ்
முழு வறுத்த வேர்க்கடலை - 50 gms
ரெட் சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்

சிக்கன் ஊற வைக்க(மாரினேட் செய்ய) தேவையான பொருட்கள்:

காஷ்மீரி சில்லி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் அல்லது எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
சிக்கன் ஸ்டாக் - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன், 1 டேபிள் ஸ்பூன் தண்ணீரில் கலக்கப்பட்டது

செய்முறை

முதலில், மாரினேட்செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்துகொள்ளவும்.
அவற்றுடன், சிக்கன் துண்டுகளை கலந்து ஒரு மணிநேரம் ஊற விடவும்.
ஊறவைக்கும் முறை சிக்கன்னுக்கு கூடுதல் சுவையை கொடுக்கிறது.
ஊறவைக்க நேரம் இல்லாவிட்டால் கவலைப்படத்தேவைஇல்லை.
அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.
அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் சிக்கனை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து அதனுடன் பொடித்த இஞ்சி,பூண்டு, சிகப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிவந்தவுடன் அடுப்பை அணைத்து வாணலியில் இருப்பவற்றை தனியாக எடுத்து வைத்துவிடவும்.
பச்சைமிளகாயில் இருக்கும் விதைகளை உதறிவிடவும். மீதமுள்ள எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய்களை தீய்ந்துவிடாமல் வறுக்கவும்.
பொரித்த சிக்கனை வாணலியில் சேர்க்கவும். அடுத்து வெங்காயத்தாள், வறுத்த வேர்க்கடலையை சேர்க்கவும் ஒரு நிமிடத்திற்கு அவற்றை
வதக்கவும். பின்னர் ரெட் சில்லி சாஸ் சேர்த்து கெட்டியாகும் வரை வதக்கவும்.
கடைசியாக, தனியாக வதக்கி எடுத்து வைத்திருக்கின்ற வெங்காய குடைமிளகாய் கலவையை வாணலியில் சேர்த்து பிரட்டவும்.
உங்களுடைய கன் பவுடர் சிக்கன் தயாராகிவிட்டது.

வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்